இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரங்கேற்றம்

படம்
ஒரு கவிதை எழுதி அரங்கேற்றினேன் ••• • குருவி முன் - சற்று செல்லமாய்ச் சிறகடித்து கீச்கீச் என்றது... • ஆடு முன் - சற்று ஒய்யாரமாய் தலை சாய்த்து காகிதம் முகர்ந்து நரிச் நரிச் எனத் தும்மியது... • மாடு முன் - அழகாய் வாய் உயர்த்தி ம்ம்ஆஆ என்றும் அதனினும் அழகாய் வால் உயர்த்தி சொத்சொத் என்று சாணம் இட்டது... • நாய் முன் - வெகு அன்பாய் வால் குழைத்து அதனினும் அன்பாய் கை விரல் நக்கி சுற்றிச் சுற்றி வந்தது... • பூனை முன் - தன் ஒரு பக்க உடலை கால் மீது உரசி ஒரே தாவலில் மடிமீது அமர்ந்து உற்றுக் கேட்டது... • மரம் முன் - இரு சருகோடு தென்றலையும் தூவி தழுவி நின்றது... • மானிடர் முன் - ஒருவர் ஆட்காட்டி விரலின் முன் நக நுனியில் காது சொரிந்து அதனை கட்டை விரலின் பின் நக நுனியால் சேமித்திருந்தார்... ஒருவர் மூக்குத் துளையில் விரல் நுழைத்து காய்ந்த சளி கொய்து ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையே வைத்து விளையாண்டிருந்தார்... ஒருவர் கைப்பேசி தொடு திரையில் ஏதோ ஒன்றை விரட்டி வென்று களித்திருந்தார்... ஒருவர் வெகு நேர்த்தியாய் கால்...

நாமெல்லாம் வெகு வெகு சாதாரண மானுட...

படம்
உலகில் வார்த்தைகள் என்பது அம்மாவைப் போல அன்பைப் போல உன்னதமான ஒன்று; வார்த்தைகளை வெகுவெகு நுட்பமாய்க் கோர்த்து கவிதை புனையலாம்; வெகு நுட்பமாய்க் கோர்த்து பாடல் இயற்றலாம்; நுட்பமாய்க் கோர்த்து உரைநடை செய்யலாம்; இன்னும் எளிதாய் பேசாதே இருக்கலாம். ஆனால் - நாமெல்லாம் வெகு சாதாரண மனிதர்களுக்குப் பிறந்த வெகு வெகு சாதாரண மானுட உயிர்கள்தானே! வார்த்தைகள் கொண்டு என்ன செய்வோம்? பரிகாசிப்போம் எள்ளலிப்போம் காயம் செய்வோம் அலட்சியம் செய்வோம் இதுபோல் என்ன என்ன எல்லாம் முடியுமோ அத்துனையும் எளிதாய்ச் செய்வோம். ஏனென்றால் - நாமெல்லாம் வெகு சாதாரண மனிதர்களுக்குப் பிறந்த வெகு வெகு சாதாரண மானுட உயிர்கள்தானே! •••

வாகன சக்கரத்தில் ஊசலாடும் மானுட சந்ததி

படம்
சாலையில் - தலை நசுங்கி பின்னங்கால்கள்  பரத்தி  குப்புறக் கிடக்கும் சொறித்தவளை; வயிறு அறுந்து பசிய முட்டை சிதறி வெறித்த கண்ணோடு கிடக்கும் ஓணான்; சரிந்த குடலோடு மீசை மயிர்கள் காற்றாட நாறிக் கிடக்கும் பெருச்சாளி;  தரையோடு தரையாய்  தாரோடு தாராய்  நீளுடல்  சிதைந்து  நைந்துக் கிடக்கும்  பாம்பு குட்டி;  தேர்ந்தவனின் ஓவியமாய்  சுவடாகிக் கிடக்கும்  அட்டைப் பூச்சி ;      வரிசையாகவே செத்துக்  கிடக்கும் சிற்றெறும்புகள்; இந்த- எளிய உயிர்கள் ஒரு நாள் சாலையைக் கடக்கக் கற்கும். பின்-இப் பரந்த பூமியில் அதன் சந்ததிகள் மட்டுமே உயிர் வாழும்... •••

எப்பத்தாம் புரியும் ஒனக்கு

படம்
மனச இரும்பாக்கிட்டு உங்கிட்டயிருந்து என்ன நானே ஒடச்சுட்டுதாம் போனேன்; எவ்வளவுக்கெவ்வளோ வெலகிப் போனனோ அவ்வளவுக்கவளோ நெருங்கிப் போயிட்டேன்; பெறகுதாந் தெரிஞ்சுது ஒடஞ்சது இரும்பு இல்ல காந்தம்னு... ••• மனசு முழுக்க உசுரு முழுக்க நெரம்பி வழிஞ்சுட்டே இருக்கு ஒன் நெனப்பு... ••• அம்மா தம்புள்ளய எப்புடி தன் நெஞ்சுக்குள்ள வச்சுப் பாத்துப்பாளோ அதுபோல உன்ன பாத்துக்கிடனும்னு ஒவ்வொரு கணமும் ஏக்கமாக் கெடக்கு... ••• ஊரே கொலஞ்சுக் கெடக்கப்ப நீ எப்புடி இருக்க என்ன பண்றனு தெரியாம சோறு தண்ணி தின்ன முடியாத நாம்பட்ட பாடு... - எப்பத்தாம் புரியும் ஒனக்கு ••• நட்டநடு ராத்திரில மழதரயில வெரலு பட்டதும் உச்சி மண்டக்கி ஏறுற சில்லிப்புல; வீட்டுக்குப் போனதும் தொத்துக்காலுப்போட்டு தாவிக்குதிக்கிறப்ப சட்டயில ஒட்டுற நாயோட பாத சொவட்டு அன்புல; நெதங் காலயில கொரலுகுடுத்து எழுப்புற மைனாவோட கொஞ்சல்ல; வாசிக்கிற பொத்தகத்தோட ஒவ்வொரு பக்கத்துலயும் ஒவ்வொரு வார்த்தயிலயும் வளஞ்சு நெளுஞ்சுக் கெடக்குற எழுத்துலனு ஒவ்வொன்னுக்கு உள்ளயும் உன்த்தாம...
படம்
கவிதை எழுதத் தொடங்கி கழுதையில் முடிந்தது... கடுகு பற்றி யோசித்தால் மலை வருகிறது; அவனுக்கு ‘ம்ம்’ என்கிறேன் அவளோடு உரைக்கிறேன்; நாயும் பன்றியும் கேவலமென்றால் நீ யார் என்கிறது அகம்; அலிகளைப் பார்க்கையில் பயக்கிறேன் ஏன்? விடையில்லை; சாக்கடையைத் தாண்டுகையில் கறையில்லா கரை வேட்டியைச் சிந்திக்கிறேன்; குழந்தையின் பாதத்தை முத்தமிட்டு ரசித்துச் சிலிர்க்கிறேன்; பால்காரனுக்கும் பஞ்சுமிட்டாய் விற்பவனுக்கும் வயதாகிக்கொண்டே போகிறது; ஓடைக்குள் கிடக்கும் உடைந்த சங்கு எதைத்தேடி காத்திருக்கிறது; விண்மீனா மின்மினியா பெரிது பற்றி ஐயம் எழுகிறது; புத்தகத்தின் மொந்தையை விழுங்கிச் செரிக்கும் கரையானாக ஆசைக்கிறேன்; துளையில்லா புல்லாங்குழல் வாங்க தேடித்தேடி ஓடிஓடி களைக்கிறேன்; இப்படியாக- கவிதை எழுதத் தொடங்கி கழுதையில் முடிந்தது...

பாரததாயின் துயர் களைதல்

படம்
அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! பாரத தாய் பெற்றெடுத்த தவப் புதல்வர்களே! வரும் காலங்களில், பாரத தாயை பாரத தந்தை எனச் சொல்லிப் பழகுவோம்... இந்தப் பாவப்பட்ட பாரத பூமியில் கிராமமோ நகரமோ பிச்சைக்காரியாக இருந்தாலும் பாரத தாயாக இருந்தாலும் அல்லை அவசரத்திற்கு என்ன செய்வர்? எவ்வளவு நேரம் அடக்கித் திரிவர்? முட்டுச் சந்தோ முச்சந்தியோ தந்தைக்கொன்றும் பிரச்சனை இல்லை நெஞ்சம் நிமிர்த்தி மீசை முறுக்கி எடுத்து நீட்டி பெய்துத்தீர்ப்பார் பீடாய் பெருநடை நடந்து கடந்து செல்வார்... அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! பாரத தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர்களே! வரும் காலங்களில், பாரத தாயை பாரத தந்தை எனச் சொல்லிப் பழகுவோம் தாயின் துயர் களைவோம்...