பாரததாயின் துயர் களைதல்
அன்பார்ந்த வாக்காளப்
பெருங்குடி மக்களே!
பாரத தாய் பெற்றெடுத்த
தவப் புதல்வர்களே!
வரும் காலங்களில்,
பாரத தாயை
பாரத தந்தை
எனச் சொல்லிப் பழகுவோம்...
இந்தப் பாவப்பட்ட
பாரத பூமியில்
கிராமமோ நகரமோ
பிச்சைக்காரியாக இருந்தாலும்
பாரத தாயாக இருந்தாலும்
அல்லை அவசரத்திற்கு
என்ன செய்வர்?
எவ்வளவு நேரம்
அடக்கித் திரிவர்?
முட்டுச் சந்தோ முச்சந்தியோ
தந்தைக்கொன்றும்
பிரச்சனை இல்லை
நெஞ்சம் நிமிர்த்தி
மீசை முறுக்கி
எடுத்து நீட்டி
பெய்துத்தீர்ப்பார்
பீடாய்
பெருநடை நடந்து
கடந்து செல்வார்...
அன்பார்ந்த வாக்காளப்
பெருங்குடி மக்களே!
பாரத தாய் பெற்றெடுத்த
தவப்புதல்வர்களே!
வரும் காலங்களில்,
பாரத தாயை
பாரத தந்தை
எனச் சொல்லிப் பழகுவோம்
தாயின் துயர் களைவோம்...

கருத்துகள்