ஆழி சூழ் உலகு -ஜோ டி குருஸ் ஐயாவோட முதல் புதினம் இது.ஐநூற்று ஐம்பத்து எட்டுப் பக்கம் கொண்ட அற்புதம். பொதுவா நாம சங்க இலக்கியத்தை தமிழக மக்களோட வாழ்வியல் களஞ்சியம்னு சொல்லுவோம். நாம அதை அப்படி சொல்றது சரினா ஜோடி குருஸ் ஐயாவோட படைப்ப கடற்கரை மக்களின் வாழ்வியல் களஞ்சியம் அப்படினு தாராளமாச் சொல்லலாம். [கடற்கரை சார்ந்த மக்களா இருந்தாலும் அது சாராத மக்களா இருந்தாலும் எல்லா உடம்புக்கு உள்ளயும் ‘அதே மனுசன்’ அப்படீங்கற ஒன்னு ஒளிஞ்சுட்டுத்தான் இருக்கு.அதனால இதை பொதுவா கடற்கரைனு மட்டும் சொல்லி ஒதுக்கிடாம நமக்கான வழ்வியல் கருவூலமாவும் நாம ஒத்துக்கிடலாம்னும் தோனுது...] உலக இலக்கியத்துல நாம பொதுவா ரெண்டு மனுசங்கள மாமேதைனு சொல்லுவோம். 1.டால்ஸ்ட்டாய் ஐயா 2.தஸ்தவே...