நாமெல்லாம் வெகு வெகு சாதாரண மானுட...
உலகில்
வார்த்தைகள் என்பது
அம்மாவைப் போல
அன்பைப் போல
உன்னதமான ஒன்று;
வார்த்தைகளை
வெகுவெகு
நுட்பமாய்க் கோர்த்து
கவிதை புனையலாம்;
வெகு
நுட்பமாய்க் கோர்த்து
பாடல் இயற்றலாம்;
நுட்பமாய்க் கோர்த்து
உரைநடை செய்யலாம்;
இன்னும் எளிதாய்
பேசாதே இருக்கலாம்.
ஆனால் -
நாமெல்லாம்
வெகு சாதாரண
மனிதர்களுக்குப் பிறந்த
வெகு வெகு சாதாரண
மானுட உயிர்கள்தானே!
வார்த்தைகள் கொண்டு
என்ன செய்வோம்?
பரிகாசிப்போம்
எள்ளலிப்போம்
காயம் செய்வோம்
அலட்சியம் செய்வோம்
இதுபோல்
என்ன என்ன எல்லாம்
முடியுமோ அத்துனையும்
எளிதாய்ச் செய்வோம்.
ஏனென்றால்
-
நாமெல்லாம்
வெகு சாதாரண
மனிதர்களுக்குப் பிறந்த
வெகு வெகு சாதாரண
மானுட உயிர்கள்தானே!
•••

கருத்துகள்