எப்பத்தாம் புரியும் ஒனக்கு
மனச இரும்பாக்கிட்டு உங்கிட்டயிருந்து
என்ன நானே ஒடச்சுட்டுதாம் போனேன்;
எவ்வளவுக்கெவ்வளோ
வெலகிப் போனனோ
அவ்வளவுக்கவளோ
நெருங்கிப் போயிட்டேன்;
பெறகுதாந் தெரிஞ்சுது
ஒடஞ்சது இரும்பு இல்ல காந்தம்னு...
•••
மனசு முழுக்க உசுரு முழுக்க நெரம்பி
வழிஞ்சுட்டே இருக்கு ஒன் நெனப்பு...
•••
அம்மா தம்புள்ளய எப்புடி தன்
நெஞ்சுக்குள்ள வச்சுப் பாத்துப்பாளோ
அதுபோல உன்ன பாத்துக்கிடனும்னு
ஒவ்வொரு கணமும்
ஏக்கமாக் கெடக்கு...
•••
ஊரே கொலஞ்சுக் கெடக்கப்ப
நீ
எப்புடி இருக்க
என்ன பண்றனு
தெரியாம
சோறு தண்ணி தின்ன முடியாத
நாம்பட்ட பாடு...
-
எப்பத்தாம் புரியும் ஒனக்கு
•••
நட்டநடு ராத்திரில
மழதரயில வெரலு பட்டதும்
உச்சி மண்டக்கி ஏறுற சில்லிப்புல;
வீட்டுக்குப் போனதும்
தொத்துக்காலுப்போட்டு
தாவிக்குதிக்கிறப்ப
சட்டயில ஒட்டுற
நாயோட பாத சொவட்டு அன்புல;
நெதங் காலயில
கொரலுகுடுத்து எழுப்புற
மைனாவோட கொஞ்சல்ல;
வாசிக்கிற பொத்தகத்தோட
ஒவ்வொரு பக்கத்துலயும்
ஒவ்வொரு வார்த்தயிலயும்
வளஞ்சு நெளுஞ்சுக்
கெடக்குற எழுத்துலனு
ஒவ்வொன்னுக்கு உள்ளயும்
உன்த்தாம் பாக்குறேன்
உன்னத்தாம்ம்ம் பாக்குறேன்ன்ன்
•••
ஓம்மொகம் ஓம்பேச்சு ஓஞ்சிரிப்பு
ஓம்பார்வ ஓந்துள்ளல் ஓங்கோவம்
ஓந்தவிப்பு ஒன்னன்பு ஒன்னட
ஓம்பாவன ஒன்வெக்கம்;
ஓங்கன்னத்துல ஒய்யாரமாத்
தொத்தியிருக்க ஒத்த பரு;
எப்பயுமே பாதியா மயங்கிக்
கெடக்க ஒன்வார்தை;
கம்பனுக்கு அடுத்து ரசிக்க
வக்கிற ஒன் ஐயோ;
குட்டியா அரும்பிக்கெடக்க ஒம்மீச...
இப்புடி
ஒவ்வொன்னும்
ஒவ்...வொன்...னும்
ஆழப்பொதஞ்சு நீண்டுக் கெடக்கு
பனமரத்து வேராட்டும்...
•••
ஒன் ஒவ்வொரு வெரலயும்
தனித்தனியாக் கேட்டுப்பாரு
‘நா இல்லாத நாளு நீயும் வராதனு’
மத்த கண்ணு பாக்காத நேரம்
படபடனு செறகடிச்சு
பக்குவமாச் சொன்ன கதய
அதுவ சொல்லும்...
•••
ஒவ்வொரு நாளும்
புதுப்புது எண்ல இருந்து
வார அழைப்புல
ஒங்கொரலத் தேடித்தேடி
தேடித்...தேடி
மரத்தேப் போச்சுது
மனசும் உசுரும்...
•••
ஒன்வயசுல
ஓம்போல வட்டம் போட்டு
நா
வாழ்ந்த வாழ்க்க
மாறித்தாம் போச்சுது...
•••
எல்லாமே மாறும்
எல்லாமும் மாறும்
•••
ஒத்தப்பூ எடுத்து வச்சு
ஒனக்காக
காத்திருப்பேன்
சம்மதமும் தந்துரு
சாகும் முன்ன வந்துரு...
•••

கருத்துகள்
எழுத்தாளரே...